Thursday, June 27, 2019

காத்திரு...உன் வருகையில்
என் கடிகார முட்கள்
இளமை ஆனதடி
உன் வாசத்தை
நிரப்பினாய்
என்னுள் சுவாசமானதடி
பார்வைகள்
பரவசமாக..
நேருக்கம்
இறுக்கமாக..
முதல் முத்தம்
பிறந்ததடி
என் கைகள்
கோர்த்தாய்...
என் இதயம்
சாய்த்தாய்
இரவுகள் பகல்
ஆனதடி உன்
அரவணைப்பில்....
வாழ்நாள் முத்தங்கள்
மொத்தமும் தந்து
உன்னையும் தந்து 
என்னை ஆட்கொன்டாய்❤️
உடலால் பிரிந்தாலும்
உயிரில் கலந்துவிட்டோம்

என் மறுபாதி
தேடி வருவேன்
காத்திரு என்
கண்மணியே...

Thursday, March 29, 2018

நிதர்சனம்


என்னவென்று உணராத பொழுதுக்குள் 
எல்லாம் இடம் பெயர்ந்தது
வலிக்கும் நிதர்சனம்
யதார்த்த புரிதலுக்கு 
பாதையிடும் 
கனவென்று இருக்காதோ
எனும் ஏக்கம் ஒருபுறம்
கலைந்தது தான் கனவென்ற
புரிதல் மறுபுறம்
நிஜங்கள் நிழலாக
நிழல்கள் நிஜமாக
மீண்டு எழுகிறேன்
மீண்டும் எழுகிறேன்
என் மூச்சு காற்றை
நோக்கிய பயணம்
மட்டுமே தொடர்கிறது...

Tuesday, April 25, 2017

காதலும் கவிதையும்சுகமாய் சுவாசம்
ஆழமாய்
உள் செல்லும் ...
மறுநொடி என்பது
உறுதியில்லை
மனதுக்கு சொல்லிவை ...
மரணம் நிச்சயம் யாவர்க்கும்..
என்றென்பது
புதிரானது...
இதயத்துக்கு
இதமானவர்களை
அருகில் நிறுத்து...
ஆழமாய்
நேசித்தாய் என்பதை
விளங்க சொல்...
வாழ்க்கை என்பது
காதலும் கவிதையும் போலத்தான் ..
எளிமையும் புரிதலும்
இங்கு மிகவும்
அவசியம்!

Monday, November 14, 2016

குழந்தைகள் தினம்

உனக்குள் உறங்கும்
குழந்தையை
துயில் எழுப்பு,
உலகம் எத்தனை
அழகு என்பது
அப்போது புரியும்  ❤

Sunday, November 6, 2016

புதிர் ஓவியம்


அவள் கவிதை
கண்களை 
என் பேணா 
கிறுக்கியது ஏராளம்...
அன்பை பற்றி அவளிடம்
பேசியதில்லை..
சண்டையிட்டது அதிகம் ..
மௌனம் காத்தது
மிக அதிகம்...
பார்வையில் புரிந்த
நேசம் இனம் புரியாதது..
வெறுமை பேசியது
பலமுறை ..
இதில் எங்கும்
இல்லை காதல் !
ஆனால் எதிலும்
இல்லாமலும் இல்லை ! 

Monday, June 13, 2016

பதிவு என் 100ஒவ்வொரு கவிதைக்கு
பின்னும் கனவுகளும்
ஏமாற்றங்களும் ஒளிந்திருக்கும் ...

இனிமையான தருணங்களும்
இயலாமையும் கொடிபிடிக்கும்

காதல் பாசம் பற்று
பிரிவு பக்தி நேசம்
என பல ரசங்கள்

எல்லாம் சொல்லும் கவிதைகள்
ஊமை மனதின்
மௌன குரலாய்
உற்ற நண்பனாய்
தலை சாய தோள்கொடுக்கும் !

இந்த 100வது பதிவு
என் முதல் தமிழாசிரியர்க்கும்
என் முதல் தோழிக்கும்
சமர்ப்பணம் !

Thursday, June 9, 2016

காதலின் சுகம்அவள் பெயரை 
ஒரு மரத்தில் 
எழுதி வைப்பேன் ..
அது நித்தமும் 
பூக்கும் 
ஆயிரம்  
கவிதைப்பூக்கள்!!
அவள் அன்பை 
காற்றில் சொல்லுவேன் 
அனுதினமும் 
பரப்பும் 
அன்பென்றால் என்ன 
என்னும் 
நறுமணத்தை!!
அவள் புன்னகையில் 
என் சுவாசம் 
பிரியுமானால் 
என் கல்லறை சொல்லும் 
காதலின் சுகத்தை.... 


Sunday, September 6, 2015

கண்ணன் எனும் மன்னன்


மனதினில் மலர்கின்றாய்
பூக்களில் சிரிக்கின்றாய்
மழலையில் திளைக்கின்றாய்
மௌனத்தில் மொழிகின்றாய்
தியானத்தில் ஸ்பரிசித்தாய்
தாயாய் அரவணைத்தாய்
தந்தையாய் கண்டித்தாய்
தோழனாய் தோள் தந்தாய் 
நீக்கமற நிறைந்தவனே
நீலவண்ணமாய் திகழ்பவனே
தித்திக்கும் தித்திக்கும்
உன் புகழ் பாட எத்திக்கும்
குழலோசை எதிரொலிக்க
உன் பொற் பாதங்கள்
பணிகின்றேன்  ! 


Tuesday, August 11, 2015

மிட்டாய்

கட்டை மீது
கட்டி வைத்தும்
கை தட்டி அழைத்தாள்!
சிவப்பு மஞ்சளுமாய்
முழுக்கை  சட்டையிட்டு
கைகளில் கால் சலங்கை கட்டி
சல சல என சத்தம் எழுப்பி
தெருவெங்கும் அவளை பார்க்க
"ஜவ்வு மிட்டாய் பேரழகி"
அவள் அடிமை அவளை
தோளில் தூக்கி வர
ஒய்யார ஊர்வலமாய்
நகர் வலம் வருகின்றாள்

Wednesday, July 29, 2015

கலாம் - எங்கள் கனவு நாயகன் !

உன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும்
என ஏங்கியிருப்பால்  எங்கள்  இந்திய தாய் !

கடைகோடி தீவினிலே பிறந்து
கண்ட கனவுகள் நிறைவேற
பயணம் தொடங்கினாய் !

அறிவியல் அதிசயம் செய்தாய்
ஆசிரியர் என்றே பெருமை கொண்டாய்
நாடு முழுதும் அன்பை விதைத்தாய் !

தேசத்தின்  உச்சம் தொட்டாலும்
அதை விட நேசத்தில்
எல்லோர் இதயமும் கலந்தாய் !

கடமை முடிந்ததாய் நினைத்தாயோ ?!
எங்கள் கண்கள் குளமாக கனநேரத்தில்
காலன் துணைகொண்டு உறக்கம் கொண்டாய்!

தீவு பூமி தேடி திரும்பி வந்தாயே தமிழா
நிரந்தர உறக்கத்துடன் ...... நீ இல்லாத
தேசம் தவிக்கிறது கனத்த மனதுடன்!

இனி நிம்மதி நித்திரை கொள் ..
நீ விதைத்த கனவு விதைகள்
விருட்சமாய் உருவெடுக்கும்!

உன் எளிமையும் பண்பும் தன்னடக்கமும்
யுகங்கள் கடந்து தீராமல்
உன் பெருமை பேசும்!

எதிர்காலமே கனவு கொள்ளும்
மீண்டும் இந்தியத்தாய்
உன்னை ஈன்றெடுக்க.....

காத்திருப்போம் 
கலாம் அவர்களே
கனவுகளுடன் !!!